Thursday, 16 July 2009

சவுக்கடி பட்ட இடத்தை
நீவிடத் தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம்தானென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்